- கண்களோ பளிங்கு
போல் பலபலக்க,
மூக்கின் முனையோ
கோவை பழம் போல் சிவக்க,
மெல்லிய மீசை முடிகள்
ஆங்காங்கே நாத்து போல்
முழைத்து கிடக்க,
மேனியோ பஞ்சு மெத்தை போல்
போர்த்தி கிடக்க,
செவிகளோ விசிரிபோல்
விரிந்து கிடக்க,
பச்சிலம் விரல்களை
பழத்தின் மேல்
பக்குவமாய் பதித்து,
குமளிப்பழத்தையே குடைந்து
இருகண்கள் வேய்ந்து,
அதன் மேல் ஒய்யாரமாய்
ஒருவியிருக்கும்
ஒவ்வொரு வீட்டின்
சின்ன சேட்டை செல்லமடி நீ….
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.