படம் பார்த்து கவி: நிலாகாதலி

by admin 2
32 views

இரவின் மடியிலே … வானவீதியிலே …
தன் நட்சத்திர பனிமலர்களோடு பவனி வரும் வெள்ளை நிற நிலவனே …
என்னவனின் முகம் கொண்டவனே …
என் தேடலே …
என் நிலாகாதலனே …
அனுதினமும் உன் வரவை எண்ணி
உன் நிலவொளியில் என்னை மயக்கி ,,
என் தேகத்தை குளிர்வித்து ,,
மாலை மயங்கும் நேரம் உன் காந்தவிழியால் என்னை சீண்டி அணைத்து கொள்ள வரும் காலம்தனை எதிர்நோக்கி காத்திருக்கும் மங்கையவள் உன் காதலி …
நிலவனின் காதலி …
நிலாகாதலி …

✍️அனுஷாடேவிட்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!