பகல் போய் இரவு வரும்
இரவு வந்தால்
நிலவு வரும் இது மின்சாரம்
இல்லா வானில்
ஒளி விளக்காக மாறும்
குழந்தையின்
விளையாட்டு பந்து ஆகவும் மாறும்
குழந்தைக்கு சோறு
ஊட்டவும் துனை நிற்கும்
நோன்பினை ஆரம்பிக்கவும்
முடிக்கவும் துனை நிற்கும்
மாதத்தில் ஒரு நாள்
விடுமுறை யும் கிடைக்கும்
நாம் நடக்கும் போது
எம்முடன் துனையாக
கூடவும் வரும்
எந்த விலையும்
இல்லாது
பல நன்மைகளை
நமக்கு தரும்
இது
இறைவன்
நமக்கு கொடுத்த
பொக்கிஷம்
M. W Kandeepan 🙏🙏