கன்று ஈனும் யானையை
சுற்றி யானைகள்
காவலாக வட்டமாக அணிவகுக்க
யானை குட்டி பிறக்க
யானைகள் சற்று நெருங்கி
முகங்கள் திசைகளை நோக்க
உடலை ஆட்டி காதுகளை அடித்து
உரக்கப் பிளிற மத்தியில்
கருமையான குட்டி யானை
செவிலியராக சிலவும்
கண்காணிக்க ஒன்றும்
குட்டியை நிற்க வைக்க முயல
மேலே வட்டமிடும் கழுகுகள் துணை ஒன்றோடு தாயும் சேயும்
யானைகள் கூட்டம் கலைந்ததே.
க.ரவீந்திரன்.