முட்களை மட்டுமே கொண்ட
முள்மன முரடனோ..
இல்லை..
எனக்குள்ளும் மனமுள்ள
மலர்கள் உண்டு
வாழும் பருவம்
மலிவென்றாலும்
மகிழ்ச்சியுடனே
மலர்ந்து மடிகிறது…!
முறிந்து போன
காதலின் நினைவுகள்
முட்களாய் முரண்டினாலும்
முந்தைய மனமொற்ற
நேயத்தின் உவகைப்
பொழுதுகள் இன்பமாய் இனிமையாய் இரசனையாய்
வாசம் வீசி நெஞ்சில்
சுவாசமாய் மலர்கிறது…!
✍️அனுஷாடேவிட்