அடி என் சப்பாத்திக் கள்ளி
உன் பூவை தலையில்
சூடி அழகு பார்க்க முடியாதே
கார்ப்பரேட் நிறுவனங்களில்
சொகுசு பங்களாக்களில்
அலங்கார தேவதையாக
வலம் வரும் உன்னை
அள்ளி அணைத்தால்
உன் முள்ளால் தற்காத்துக்
கொள்ளும் கள்ளி நீ
உன் பூ நீரை சுத்தம் செய்ய
உன் பழம் கருப்பை சினை
கட்டியை கரைக்க எங்கள்
அன்பு தோழி நீ.
க.ரவீந்திரன்.