காட்டுச் செடி உன்னை
வீட்டுக்கு நடுவுல
தொட்டியில நட்டதாரு?
முள்ளு செடி உனக்கு
பாதுகாப்பு வேலியிட்டு
பார்த்தது யாரு?
பாளை நிலத்து
இடுகாட்டு செடி உன்னை
இல்லத்தில் நட்டது யாரு?
கள்ளி பாலெடுத்து
பச்சிளம் சிசு வுக்கு
உயிரெடுக்க தந்தவரா?
கள்ளிப்பழத்தில்
நட்சத்திர முள்ளெடுத்து
உதட்டு சாயம் பூசியவரா?
மாறாத மாற்றத்தை
மனதில் கொள்
கள்ளிக்கு நீறூற்றும்
காலம் இது
சர் கணேஷ்