விழியின் அழகில்
மையல் கொண்ட
மன வானின்
மின்மினி……..
இதமான நிழலாக
தொடரும் கனவுகளை
துரத்தும் பாவையின்
புருவ நெளிவில்
வளையும் வில்லின்
கூர்மையான பார்வையில்
மலர்ந்த மலரின்
வாசத்தின் சுவாசமாய்
மெளன மொழி
பேசும் ஓவியம் ……..
கவிதை வீதியில்
காற்றாய் வந்து
காதல் சொன்ன
கருமேக காரிகையின்
கூந்தல் வளைவில்
எட்டாவ(த)து அதிசய
அன்பு பரிசாக
வானவில் பூக்கள்……..
பத்மாவதி