குளிர்ச்சியான பனிக்கட்டியே…
நீ……………….
ஆண்பாலா பெண்பாலா
என என் உள்ளத்தை
உருக்கும் ஒரு பட்டிமன்றம் சுருக்கென வர….
கதிரவனை கண்டவுடன்
சதியென காதலால்
கசிந்து உருகுவதை கண்டு
நீ பெண்பால் தான் என செம்மொழியில் எனக்குள்
தீர்ப்பு சொல்லி மகிழ்ந்தேன்
உஷா முத்துராமன்