இன்றோ நாளையோ வருவார்கள்… என்னைக் கை கொண்டு எடுத்து விளையாடுவார்கள்… முடிந்தால் யாரும் அறியா வண்ணம் புசிப்பார்கள் இந்தக் குழந்தைகள் காத்திருக்கிறேன் அவர்களுக்காக…
பின்னொரு நாள் வருவார்கள் என்னை சொந்தம் கொண்டாடுவார்கள்… என் மீது சுமையேற்றி வாழ்வார்கள் காத்திருக்கிறேன் அவர்களுக்காக…. பிரிதொரு நாள் அவர்களைக் கிடத்தி என்னுள் புதைப்பார்கள் சொந்தமென்பதை மாற்றுவார்கள்
காத்திருக்கிறேன் அவர்களுக்காக…
எப்படியாகினும் நான் மண் தான் மாற்றமில்லை
எனக்காக என் மீதான போர்களுக்கும் குறைவில்லை
கங்காதரன்