10 வரி போட்டிக் கதை: தின்பண்டங்கள்

by admin 1
108 views

நாகர்கோவில் போத்தீஸ் சூப்பர் ஸ்டோர் வழக்கத்தை காட்டிலும் சனிக்கிழமை சற்று கூட்டம் அதிகமாக தானிருக்குமெனினும்

கேஷ் கவுண்டரில் தான் அத்தனை கூட்டமும் மொத்தமாய் நெருக்கும்.

கேஷியர் பிரதீபா கொஞ்சம் வேகமாக பில் போடுறதால அவ கவுண்டருக்கு தான் வழக்கமா வருகின்ற கஷ்டமர் போக விரும்புவாங்க என்பதால் அவ கவுண்டர் இன்னும் அதிக கூட்டமாய் இருக்கும். 

அதிலும் கஸ்டமர் மாலதி சனிக்கிழமை தவறினாலும் தவறாது வந்திடுவாள் பிரதிபா கவுண்டருக்கு. 

பிரதீபாவால் மறக்க முடியாத கஸ்டமர்களில் மாலதி மிகவும் முக்கியமானவள். 

ஒவ்வொரு வாரமும் தின்பண்டங்கள் மட்டுமே 7000 8000க்கு பில் ஆகும்.

ஒவ்வொரு முறையும் மாலதி புலம்பும் அதே புலம்பலுடன் இன்றும் பில்லிங் நடைபெற்றது. 

நானும் பார்த்து பார்த்து தான் இவனுக்கு வெரைட்டி வெரைட்டியா ஸ்னாக்ஸ் வாங்கி கொடுக்கிறேன் அப்பப்ப ஆன்லைன்லயும் கூட. 

இவனுக்குத்தான் ஒண்ணுமே பிடிக்க மாட்டேன்றதால போன வாரம் வாங்கி போட்டது அப்படியே தூக்கி குப்பை தொட்டியில் போட்டிருக்கு என புலம்பி முடிக்கவும் பில்லிங்கும் முடியும்.

பில்லிங் முடிந்தாலும் முடியாமல் பிரதிபாவின் மனத்திரையில் வீட்டில் நடந்த நிகழ்வுகள் படமாய் ஓடும். 

ஏன்மா தின்பண்டமே வாங்கி கொடுக்க மாட்டேன்றீங்க அப்படியே வாங்கினாலும் அஞ்சு ரூபா பிஸ்கட் இல்லனா முறுக்கு மட்டும் தான் உங்களுக்கு தெரியுமா என தன் 7 வயது மகனின் குரல் காதில் ஒலிக்கும்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!