10 வரி போட்டிக் கதை: பூர்வீக வீடு

by admin 1
92 views

1. பல வருடங்களுக்கு பிறகு பிறந்து வளர்ந்த ஊர், வாழ்ந்த வீடு பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் பல நாட்கள் தூக்கமற்று இருந்தான் தீபக்.

2. அந்த நாளும் வந்து இதோ அந்த காவிரி பாயும் மண்ணை மிதித்ததும் உடலெங்கும் சிலிர்க்க ஒரு சொல்ல முடியாத ஓர் பரவச நிலையை உணர்ந்தான் தீபக்.

3. ரயில் நிலையம் விட்டு வெளியே வந்தவன் இங்கு நிற்கும் குதிரை, மாட்டு வண்டிக்கு பதிலாக ஆட்டோக்களின் அணிவகுப்பு

சுற்றி முற்றிப் பார்த்து ஊரே மாறியிருக்கு என நினைத்தான்.

4. இந்த ஊரில் பாட்டி, தாத்தா, அப்பா, அம்மாவோடு இருந்த நாட்கள் எத்தனை மகிழ்ச்சி, குழந்தையாகவே இருந்திருக்கலாம் என பலவாறு யோசித்தபடி நடந்தான்.

5. சுவாமி தரிசனத்திற்கு வருபவர்களை உபசரித்து உணவளித்து, தினமும் வருவோரும் போவோருமாக

திருவிழாக் கோலமாய் எப்படி இருந்த வீடு அது.

6. அந்த காலத்து ஓட்டு வீடாகினும் பெரிய வீடு, தாத்தா, பாட்டி காலத்திற்கு பிறகு சில பல காரணங்களால் அங்கு வாழ முடியாது விற்று விட்டார் அப்பா.

7. ஆனால் தீபக்கால் அந்த வீட்டை மறக்க முடியவில்லை , தான் ஓடி விளையாடி வளர்ந்த வீடு பல மறக்க முடியாத நினைவுகளை உள்ளடக்கியது.

8. ரொம்ப நாட்களாக ஊருக்கு வந்து பார்க்கணும்னு தோணும் ஏதோ வேலை குடும்பம் னு போய் , எல்லாத்தையும் ஓரங்கட்டி வைத்து விட்டு பிடிவாதமாக வந்தாச்சு என யோசித்தபடி அந்த குறிப்பிட்ட வீதிக்குள் நுழைந்தான். 

9. அந்த வீட்டுல இப்ப யார் இருப்பார்களோ, யார் இருந்தாலும் விவரத்த சொல்லி அனுமதி வாங்கி உள்ளபோய் பாத்துடணும் னு வேகமாக நடந்து வீட்டை பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

10. அதே வீடு, சுலபமாக அடையாளம் காணும் விதத்தில்

யாரும் புழங்காமல் பூர்வீகவீடு எந்த மாற்றமுமின்றி யாருமற்ற பாழடைந்த வீடாகப் பார்த்ததில் தீபக் வருத்தமும், சீக்கிரமே இந்த வீட்டை பற்றி விசாரித்து நாமே வாங்கிடணும் என மகிழ்ச்சியோடு உரிமையாளர் பற்றி விசாரிக்கலானான்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!