விவரம் அறிந்த
சிறுவயதினிலே
பள்ளி பருவத்திலே
வரும் வழியில்
வாதானி மரமுண்டு..
அதன் கீழே வாதுமை பழங்கள் சிதறி விழுந்து கிடக்க
அதை கொத்தி உண்ணும் பறவையை துரத்தி ஒட்டியிருக்கும் மண்ணைத் தட்டி
இரண்டு கற்களின் நடுவில் வைத்து இடித்து உள்ளிருக்கும்
பாதானி பருப்புகளை உடைந்திடாமல் எடுத்து ஆர அமர்ந்து நண்பிகளுடன் பகிர்ந்து சாப்பிடும் வேளை மரக்காவலன் தலை கண்டு தெறித்து ஓடி ஒளிந்து மீண்டும் கீழே கிடக்கும் வாதானி பழங்களை பொறிக்கிக் கொண்டு வீட்டில் வந்து நெருப்பில் சுட்டு உடைத்து நாவில் இட்டு உண்ணும் சுவைக்கு ஈடேது..?
என் சிறுவயது நினைவாய்…!
✍️அனுஷாடேவிட்
