உன் புருவங்களின்
அழகுக்கு
பாதாம் பருப்பை
சுட்டு எரித்து
கரியெடுத்து மை பூசுவதாய் சொன்னாய்
ஏனோ
அதிலிருந்து
பசும்பால் குடிப்பதையே
நிறுத்திவிட்டேன்
இப்போது எல்லாம்
பாதாம்பால் தான் குடிக்கிறேன்
இவ்வளவு ஏன்
தலையில் தேய்க்கும் எண்ணெய் முதல்
உடம்பில் தேய்த்து குளிக்கும்
சோப்பு வரை
பாதாம் தான்
உனக்கு பிடித்தவைகள் எல்லாம்
பைத்தியம் பிடிக்கும் படி
எனக்கும் பிடித்து தான் போகிறது
ஏனோ
அந்த பாதாம் பருப்பின் தலைமுறைகள் தான்
என்னை சபித்து கொண்டிருக்கின்றன!
-லி.நௌஷாத் கான்-
