மனம் வென்ற இல்லத்தில்
மகிழ்ச்சி என்ற சாவிக்
கொண்டு திறக்கவும்
பகிரவும் சொல்லிக்
கொடுத்த என் பெற்றோருக்கு
நன்றி சொல்லி அதையே
என் உயிர் மூச்சு என்ற
ஆவீயாக எண்ணி மகிழ்கிறேன்
இந்த சாவிக்கு………
போட்டி உண்டு ஆனால் பொறாமையில்லை
வட்டி உண்டு ஆனால்
முதல் இல்லை.
பல மகிழ்ச்சி சேரும் போது அளவில்லா நிம்மதி
கொத்தாக வருவது போல
பல சாவிகள் சேரும்போது
அதுவும் வளையத்திற்கு
புகுந்து கொத்தாகி தன்
கெத்தினை காட்டுவது
இயல்புதானே …..
உஷா முத்துராமன்