மனத்தை ஒருமுகப்படுத்த
தியானம்….
மனச் சிதைவுக்கோ
மனநல மருத்துவரும்
மாத்திரைகளும்…
காலம் வரைந்த
கோலங்கள்…
என் சொல்ல?
நேர்த்தியான புள்ளிகள்
இழைத்த கோலங்கள்
உதிரிகள் ஒருங்கிணைந்த
பூச்செண்டுகள் ….
மருத்துவம் நாடா…
நம் பாட்டிமார்களின்
தினசரித் தியானம்!
நாபா.மீரா