கையை ஆட்டி காற்றிடம்
மையல் கொண்ட காலத்திற்கு
விடை கொடுத்து……… நீயே
சுற்றி காற்றினை
வெற்றி சிரிப்புடன் தெளித்ததை பற்றிக் கொண்டேன் ஆவலுடன்
இது நடந்தது அன்று……..
இன்று பலரும் உன்னை
மென்று சாப்பிட்ட பின் துப்பிய கொட்டையாக நீ நிலத்தில் விழுந்தாலும்………
பல ஏழை வீடுகளில்
உனக்கு கிடைப்பது
ராஜ உபசாரம்……….. எதை
மறந்தாலும் பழசை
மறக்காதவர் இன்றும்
திறம்பட உன்னைப் பேணுவர். உன்னை உயிருடன் சுழல
வைக்க தேவையே மின்சாரம்
என்பதை உணர்ந்தோர்
அனைவருக்கும் வீரவணக்கத்துடன் குளிர் காற்றை வாரி வழங்கும்
வள்ளல் நீ என போற்றுகின்றேன்.
உஷா முத்துராமன்