கறிவேப்பிலை இல்லா பதார்த்தமா?
சுவைக்கும் மனதிற்கும் இவையில்லா உணவில்லை!
பல நலன் பயந்து உடலையும், கூந்தலையும்
மெருகெற்றும்
உனக்கில்லையே உவமை!
வேப்பிலை என முடிவதாலேயே
உன்னை ஒதுக்குவோரே
அதிகம்,
கடைவீதியில் இனாமாக பெறுவதிலேயே
ஒரு அலாதி ஆனந்தம்,
முடிவில்..
இலையில் ஓரத்தில் குப்பைக்கூடைக்கு இணையாகினாயே? இரையாகினாயே?
சுஜாதா
படம் பார்த்து கவி: உதாசீனம்
previous post