மண்ணை
தோண்ட,தோண்ட
தண்ணீர் ஊற்றெடுக்கும்
ஊற்றெடுத்து பெருகும்
தண்ணீருக்கு வடிகாலாய் அமையும்
கிணறு-அது போல
மனதை தோண்ட,தோண்ட
காதல் உருவாகும்
நதியாய் பெருகி ஓடும்
காதலின் அணைக்கட்டாய்
திருமணம் அமைகிறது
கட்டுப்பாட்டில் குடும்பம்
கட்டமைவது தான்
கலாச்சாரத்திற்கு பேரழகு!
-லி.நௌஷாத் கான்-
