படம் பார்த்து கவி:  கோடையின் விடியல்

by admin 1
48 views

காலமகளின்
வரலாற்றுப் பக்கங்களில்
உனக்கெனத்
தனியிடமொன்றுண்டு..
ஆதி மனிதனின்
ஆளுமையில்
அவதரித்த
சக்கரத்தின்
வட்டச் சுழலில்
மையம் கொண்டு
மெழுகென உருமாறிய
மண்ணைப்
பதமாய்
பக்குவமாய்
குயவனின்
கைக்கணக்கில்
உபகரணமே இல்லாமல்
வடிவியலானாய்
கோடையின்
விடியலானாய்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!