விண்கலம்….
வானம் அணிந்து மினுமினுக்கும்
அணிகலன்…
விண்ணில் நீந்திக் கொண்டே
வானமும் பூமியும்
ஆராயும்..
அறிந்து கூறும்.
கோள் நிலை
அறியலாம்….
நாள் நிலை
புரியலாம்…
நாட்டின் பலம்
தெரியலாம்…
காட்டின் வளம்
அறியலாம்…
விலைமிகுந்த விண்கலம்
விஞ்ஞான விளைகளம்….
S. முத்துக்குமார்
