அலைக்கடல் தாண்டியும்
திரவியம் தேடு என்றார்கள்
முன்னோர்கள்
பணம் பின் சென்றதால்
மனம் தனிமையில்
வாடி தான் போனது
அவன் வருவதற்கு முன்னால்
எவன் என நீங்கள் கேட்பது
என் செவிக்குள்ளும் ஒலிக்கிறது
Distance Relationship எல்லாம்
Deep Relationship ஆக மாறியது
அவனால் தான்
அவள் செல்ல முத்தத்தை எல்லாம்
கள்ளத் தனமாய்
பரிமாற்றம் செய்தது
அவன் தான்
உலகமே கொரோனா பிடியில்
சிக்குண்டு இருந்த போதிலும்
தனிமை வீட்டுச்சிறையில்
உறுதுணையாய் இருந்த
நண்பன் அவன்
அவன்,அவன் சொல்கிறாயே
எவன்டா என நீங்கள் கோபத்தோடு
கேட்பது புரிகிறது
மாடர்ன் உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
சாத்தானும்,கடவுளும் கலந்த கலவை
அவன் தான்
ஆண்ட்ராய்டு மக்களின் செல்லக்குழந்தை
செல்போன்!
-லி.நௌஷாத் கான்-
