தாகம் தீர்க்கும் ஒரு
பாகமாக உன்னை சுமந்து
வேகமாக நடப்பேன்
வியாபாரிகள் விற்கும்
நீர் பாட்டிலும் நெகிழி
நிரப்பப்பட்ட நீரும்
வாங்குவதால் நோயினை
காசு கொடுத்து
வாங்குவதாக எண்ணம்
தேங்கி விடுவதால்
பள்ளி செல்லும் மாலை முதல்
பல்லில்லாத முதியவர் வரை
உன்னை எந்த
வண்ணத்திலும் வாங்கி
திண்ணமாக நல்ல நீரை எண்ணம்போல் நிரப்பி
தூக்கிச் செல்வது சுமையில்லை
சுகமான சுமை என
அகம் மகிழ்வது உண்மை
உஷா முத்துராமன்
