என் காதல் நாயகனே….
குழந்தையோடு
குழந்தையாய்
வண்ண வண்ண உறிஞ்சு குழாய் கொண்ட குடிநீர் குடுவைகளில்
விளையாடிக் கொண்டிருக்கிறாய்….
உன் அழகை கண்கள் பருகினாலும்,
உன் இதழ் அச்சினை தீண்ட மனம் அலைபாய்கிறது….
உன் இதழ் தீண்டிய குடுவைகளை மட்டும் விட்டுவிட்டு போ…
என் இதழ்களும் உன் இதழ்களின் அளவை அளந்து பார்க்கட்டும் சில நொடிகள்….
லதா கலை
