நீயும் நானும் அன்பே!
வாழும் காலம் யாவும் காதலோடு வாழ!
ஊடல் கொண்ட பொழுதினில்,நான் பூக்களுக்கு நீர்க் குழாயில் நீர்ப் பாச்சும் தருணங்களில்….
என்னிடம் இருந்து குழாயைப் பிடுங்கி என்மேல் நீரினை பாய்ச்சுவாயே!
இது தினமும் நடக்க, அதன் காரணம் அறியாமல் தவித்தேனடா!
கண்டுகொண்டேனடா!
உன் மனதில் நான் மொட்டாக அரும்பி பூவாக மலர்ந்து விட்டேனென!
உன்னால் கூச்சம் கொண்டேன்….
சுற்றம் மறந்தேன்….
உனக்கே உனக்கான பூவாக மலர்ந்த நான் என்றும் உன் வசமடா!
அணைத்துக் கொள் அன்பே காலம் முழுதும்…
நன்றி ❤️
- ஜீவேந்திரன் சாஹித்யா
