உரல் உலக்கை எப்படி
ஊனும் உறவுமாக
கணவன் மனைவியை போல
ஒன்றாக இணைந்து
ஒற்றுமையாக இருக்கிறதோ..!
அதே போல,
நானும் என்னவனுடன்
ஊனும் உறவுமாக இருந்து,
உயிருக்கு உயிராக பழகி,
அவனின் கடைசி காலம் வரை
அவனுக்கு உறுதுணையாகவும்,
பக்க பலமாகவும் இருப்பதுடன்
நல்ல தோழியாயாகவும்,
தாயாகவும் மாறி,
அவனை கண்ணும் கருத்துமாக
பார்த்து கொண்டு,
நம் உயிர் இருக்கும் வரை
ஒன்றாக இணைந்து
ஒற்றுமையாக வாழ்ந்து இந்த உலகையே,
உரல் உலக்கையினை போன்று
வாழ்ந்து வென்று விடுவோம்….!
படம் பார்த்து கவி: உரல் உலக்கை
previous post
