நீ தான் வேண்டுமென
அந்த கல் மனசு கடவுளிடம்
வரங்கள் எல்லாம் கேட்டதுண்டு
அம்மிக்கல்லாய்
இருப்பவளிடம்
ஒரு போதும் காதலை எதிர்ப்பார்க்காதே
என்று சொன்ன கடவுளின் குரல் ஏனோ
என் செவிட்டு காதுகளுக்கு விழவே இல்லை
காலங்கள் கடந்த பின்
காயங்கள் வந்த பின்
நிம்மதி கிடைத்தால் போதுமென
பெருமூச்சு விட வைத்து விடுகிறது
இந்த அல்ப வாழ்க்கை!
-லி.நௌஷாத் கான்-
