கதிரவன் கதிர்வீச்சு
வேண்டாம் வீட்டின்
ஜன்னல் அருகே உன்
கன்னம் பதித்து ஒரு
வண்ணக் குடுவையில்
நட்டேன். தேவை
சட்டென்று நீர் பொழிய
பச்சை பசேல் என
இச்சையுடன்
வளர்த்தேன். கட்டுக்கட்டாக நீ
பட்டுப்போல ரூபாய்
நோட்டுகளை தருவாயா?
உனக்கு அந்த சக்தி உண்டா?
கணக்குப் போட்டு என்
பிணக்கில்லா மனம்
சொல்ல
நம்பிக்கையுடன் பார்க்கிறேன்
அடாத நம்பிக்கை
என்பதால்
விடாது எதிர்பார்த்து
சிரிக்க நீயும் என்னை
பார்த்து……………
வளர்கிறேனே மம்மி என
தளிருடன்
சிரிக்கிறாய்!!!
உஷா முத்துராமன்
