பெயரிலேயே பணமிருப்பதால், பலரால் அன்பு செலுத்தப்படுவாய் நீ!
வேரின்றி,
மணலின்றி வளருவாய் நீ!
அழகுக்கு மட்டுமாய்,
விழியின் குளிர்ச்சிக்குமாய் நீ!
உயிர் காற்றை உற்பத்தி செய்து, உணர்வு கொள்ள வைப்பாய் நீ!
வாஸ்துவை நம்பும் நம்மவர் உழைப்பை, நம்பாமல் போன பலன் உன் பெயர் சொல்லி,
பிழைப்பு நடத்தும் பணபெருக்கிகள் கூட்டம் குவிய
அறிவீலியாய் அதை நம்பும் முட்டாள்கள் கூட்டமாய் நாங்கள்…
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: பணம் காய்ச்சி மரம்
previous post