எழுத்தாளர்: நா.பா.மீரா
இந்த வயசான காலத்துல நம்மள இப்படிப் பிரிச்சு வச்சிட்டாங்களேங்க…. புலம்பிய மனைவியைத் தட்டிக்கொடுத்த லிங்கேஸ்வரன் ..இந்தப் பூங்கா ஏற்பாடே உனக்காகத்தானே மகேசு….புரிஞ்சிக்கோ ..நம்ம பிள்ளைங்களுக்காகத்தானே ….
அவர்களுக்கு இரு பிள்ளைகள் …மருமகள்களும் வேலைக்குச் செல்ல…வேறு எந்த வசதிக்குறைவுகள் இல்லாவிட்டாலும் பிரிவு அவர்களைத் தாக்க …தினமும் பேரப்பிள்ளைகளுடன் பூங்கா வந்து செல்லும் நேரம் மட்டுமே அவர்களுக்கானது திடீரென்று ஒரு நாள் …குழந்தைகள் எனக்குப் பாட்டி …எனக்குத் தாத்தா …அடம்பிடிக்க வேறு வழியின்றி … பிள்ளைகள் மாற்று ஏற்பாடுகள் செய்ய….
அய்யா ஜாலி …குழந்தைகள் ஆரவாரிக்க….தங்கள் ஏகாந்தம் மீண்ட திருப்தியில் அந்த முதிய மனங்கள் ஆரவாரித்தன. .
முற்றும்.