பூமி பிறந்து
454 கோடி வருஷம் ஆச்சு
சாமி உனக்காக காத்திருந்து,காத்திருந்து
ஏழேழு ஜென்மமும்
முடிஞ்சு போச்சு
அந்த பூமிக்கு
புதன்,வெள்ளி,செவ்வாய்,
வியாழன்,சனி,நெப்டியூன்,
புளூட்டோன்னு எட்டு பேர் துணை
உன்னை விட்டால்
இந்த அறியாபிள்ளைக்கு யாரடி?
என் சூரியமண்டலமும் நீ,
என் சந்திரமண்டமும் நீ,
என் பிரத்தியும் நீ,
என் சொந்தமும் நீ,
என் நண்பனும் நீ,
என் பாதுகாப்பும் நீ,
என்னுடைய எதிரியும் நீ,
என் வாழ்க்கை
எல்லா திசையிலும் சுழல்வது
உன்னால் தானடி
நீயின்றி நான் ஏதடி?!
-லி.நௌஷாத் கான்-
