குவி லென்ஸ் வடிவத்தில்
நமது அண்டம்
சூரியனைப் போல
ஆயிரம் கோடி விண்மீன்கள்
அதன் கீழே சூரிய மண்டலம்
புதன் வெள்ளி பூமி செவ்வாய்
குட்டி கோள்கள் வியாழன் சனி யுரோனஸ் நெப்தியூன் புரூட்டோ
கோள்கள் சூரியனைச் சுற்றி
தம்மை தாமே சுற்றி வர
பூமியின் துணைக் கோள்
சந்திரன் பூமியை சுற்ற
பிரபஞ்ச ரகசியத்தை
புரிந்து கொண்டேன்
அவள் உள்ளத்து
ரகசியம் புரியலையே
க.ரவீந்திரன்.