என் அழகனே…
நீ நாகரீகமான
ஜீன்ஸ் அணிந்து
வந்தாலும் சரி..
பாரம்பரியமான
பட்டு வேஷ்டி கட்டி
நடந்தாலும் சரி…
எதிலும் உன் நடையின்
கம்பீரமும் அழகும்
குறையவும் இல்லை…
என் கண்களும்
உனை ரசிக்க
தவறவுமில்லை…..
ஏனோ
என் கண்கள்
ரசிக்கும்
அனைத்திலும்
நீ மட்டுமில்லை
உன் அசைவு கூட
அழகாய் தான்
தெரிகிறதடா
அழகனே🥰……
🩷 லதா கலை 🩷