கண் வழியே
காணும் காட்சி
குறை படும்போது
கண்ணாடி
முன்வந்து
காப்பாற்றும்…..
வெயிலில்
வதைப் படும் போது
கருப்புக் கண்ணாடி
குளுமை தரும்..
யாரும் அறியாமல்
அருகிருப்போரை
நோட்டம் விட
பேருதவி செய்யும்…
ஸ்டைலுக்காய்
அணிந்து
சைடு பார்வை
நோக்க –சிலர்
அணிவர்…
இன்று பலவகை
கண்ணாடிகள்
பரவலாய்
இருந்தாலும்..
கண்ணுக்குள்
லென்ஸ் வைத்து
கண்ணாடி
துறந்தாலும்…
பொதுவாய்
கண்ணுக்கு
அணிகலன்
கண்ணாடி…!!
S. முத்துக்குமார்