உரலில் இட்ட உளுந்தும் அரிசியும்
அரைந்து ஒன்றுடன் ஒன்று கலந்து
குப்பென்று பொங்கிய பிறகு
குழியில் தள்ளி
இட்ட மாவு மீண்டும்
உருவமெத்து பொங்க
பஞ்சு பஞ்சாக
வட்டவடிவில் நிலவு போல இருக்க
குழந்தை முதல்
பெரியவர் வரை
நோய்க்கும் மருந்தாகி எளிதில்
ஜீரணிக்க வைக்குமே
யாருடனும் இணைவேன் என்ற
பலவித சட்னியுடன்
பரிமாறினால் அவைப்போர் மனதும்
வயிறும் சிறப்பாகும் உணவு இட்லிதான்!!!
கவிஞர் வாசவிசாரநாதன் திண்டுக்கல்