அரிசியும் உளுந்தும்
அரைத்து
ஆவியில் உருவாகும்
அருமை உணவு…
மாவை ‘இட்டு அவிப்பதால்’
‘இட்டவி’ ஆகி
இன்னும் மருவி
‘இட்லி’ ஆனதோ..!
எத்தனை வகை…!
செட்டிநாடு, ரவா,
மங்களூர், காஞ்சி,
ஜவ்வரிசி.. இன்னும்
காய் சேர்த்து
காரம் சேர்த்து…
சிறுவற்காக
‘மினி இட்லி’….
எத்தனை அவதாரம்..
காலையும் இரவும்
காத்திருந்து
தோழமைக்கு சட்னி
சாம்பார் சேர்த்து
சுவையாய் சுகம்
தரும் வெண்பஞ்சு
இட்லியே… உன்னை
வெல்வார் இல்லை..
உனக்கு ஈடு இல்லை.
எண்ணெய் மிளகாய்
போர்வை இட்டு
நாவின் சுவையை
கூட்டுவாய்…
சாம்பாரில் முழுகி
நிறம் மாறி
வேறு உலகம்
காட்டுவாய்….
ரோட்டோர ஆயா,
காரோட்டி வரும்
சுவை விரும்பிக்கு
கையேந்தத்
தருவாள்
மல்லிப்பூ இட்லி!
அவனியின்
அங்கீகாரம் என்றும்
உனக்கே.. எனது
அருமை இட்லியே..
நீ வாழ்க!!
S. முத்துக்குமார்