சிவந்த செம்பருத்தி இதழ்களில்
உன் தேனுறும் இதழினை கண்டேனடி!
காற்றின் அசைவினில் அலைபுறும் போது
விரிந்து சுருங்கும் போது உன் இதழ் ரேகைகளில் கண்ணினை வைத்தேனடி!
பல அடுக்கு மலரினில் கூட்டு குடும்பங்களின் சாரம்சத்தையும்
ஐந்தழில்
தனிக் குடித்தனத்தையும்
ஒற்றை அசைவில் தெரிவித்து ஒரு தத்துவத்தையே சொல்லிய உன்னை இறைவனின் படைப்பின்
அற்புதமென்பேனடி
பெண்ணே!
கிராமத்து கிளிகளின்
ரோஜா நீயே!
உடலழகுக்கு செம்பருத்தி தேனீர்!
முடியழகுக்கு செம்பருத்தி எண்ணெய்!
மன அழகுக்கு
உன் மகரந்தமே அன்பை சிதறிடுமே!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: சிவந்த இதழினி
previous post