செம்பருத்தி பூவின்
மென்மையான
செவ்விதழ் போலவே
என்னவனின்
இதழ்களும்….
தேன் உண்ணும்
பொன்(பெண்) வண்டாய்,
எத்தனை முறை
முத்தமிட்டு
அவன்
இதழ் தேனை
திருடினாலும்
அதன்
மென்மையும்
செம்மையும்
ஒரு முறை கூட
மாறவும் இல்லை….
அவன் கொண்ட
செவ்விதழ் தேன்
சுவையோ
ஒரு போதும்
திகட்டுவதுமில்லை…..
🩷 லதா கலை 🩷
