பகலில் வேப்ப மரத்தடியில்
இளைப்பாற….
அதே மரத்தின் கீழ்
இரவில் தூங்க தடா…
பேய்.. பிசாசு.. இருக்கும்
காத்துக் கருப்பு
அடிச்சிடும் பேராண்டி!
உண்மைக் காரணம்
தேடி அலைந்த எனக்கு
அறிவியல் ஈந்த விளக்கம்
மரங்கள் பகலில் படைக்கும்
சுவாசமாம் ஆக்ஸிஜனை
இரவில் தாராவாம்…..
பேயாவது…பூதமாவது….
அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேயாம்…
நாபா.மீரா