முடிவல்ல புதிய தொடக்கம்
முடிவு வந்தாலும்,
அந்த முடிவில் ஓர் சிறு அர்த்தம் மறைந்திருக்கும்.
அடையாளம் விட்டு மறைந்தால்,
காற்றில் கலந்த வாசம் வீச கற்றது கூட இருக்கும்.
அவைகளை மறக்க முடியாமல்,
பாதைகளை விடுவித்து விட வேண்டும்.
எந்த முடிவும் இறுதியாக இல்லாமல்,
புதிய தொடக்கத்திற்கு பாதையை காட்டுகிறது.
நெஞ்சின் தீபம் மெல்ல ஒளி பாய்ந்தாலும்,
அந்த ஒளி என்னை வழி காட்டி,
இனிய நாளின் புதிய பயணத்திற்கு காத்திருக்கும்
முடிவுகள் அனைத்தும் ஒரு தொடக்கம் தான்.
உஷா முத்துராமன்