❣️சிறப்பின் அடையாளம்❣️
என்னவனின்
மூச்சுக்காற்றான
தமிழே…
பிற மொழிகள்
ஆயிரம் கற்றாலும்
என்னவனின்
உயிர் மொழியாம்
தாய் மொழி தமிழான
உன்னை கற்க துவங்கினேன்…
உன் மொழியின் சுவையை
ருசித்த பின்
தான் அறிந்தேன் ….
ஆயிரம் பேரில்
எனை ஈர்த்த
என்னவனை
போலவே….
ஆயிரம் மொழிகள்
வந்தாலும்
உன் தனிச்சிறப்பு
என்றும் குறையாது…….
🩷 லதா கலை 🩷