❤️அரூபிக்காக ❤️
உருவமற்ற உன்னில்
தான்…
என் கவிகளும்
உலவி திரிந்தது….
அரூபமாய் நீ நின்று
ஆயிரமாயிரம் கவிஞர்களை
நிஜமாக்கி விட்டாய்….
முடிவெனும்
ஒன்றில்
நீ முடிந்து விடக் கூடாது….
முடிவாய் துவங்கு
உன் புதிய
அத்தியாயத்தை…
மீண்டும் புதிதாய்
பிறந்து வா…
பல கவிகளையும்
சிறப்பிக்க வா…
உலகறிய உன் புகழை
உயர்த்த வா..
என்னவனை
போலவே
என் மனம் கவர்ந்த
அரூபி தளமே ❤️
🩷 வாழ்த்துக்களோடு
நன்றியும் சேர்த்து உன் வரவுக்காய் எதிர்பார்த்து
பிரியா விடையளிக்கிறேன்🩷
நன்றி
🩷 லதா கலை 🩷