🌸தமிழ்🌸
எழுத எளிதான ஒரு மொழி!
பழகப் பழக விரல் வழி
ஒழுகி வடிவம் பெறும் மொழி.
எழுதும் சொல். சொல்லும் பொருளும்
இணையும் இயற்கை வேர்ச் சொல்;
இணையும் ஒர் எளிய பாங்கு
உயிரும் மெய்யும் சேரும் அற்புதம்
சிறாரும் எழுத்துக் கூட்டியே வாசிக்க
இயலும் தனிப் பெரும் சிறப்பு
முன்னும் பின்னும்
ஓடாமல் கைவிரல்
சுக்கான் நகர, தாமே
சொற்கள் வந்து
அமையும் நளினம்
எம்மொழிக்குச் சொந்தம்?
பா ஒன்று நான் புனைய
முனைய, யாப்பிலக்கணம்
முன் வந்து
ஆசான் போல் பாடம் சொல்லும்.
பாடலுக்கு அணி செய்யப் பலவகை
அணி இலக்கணங்கள்;
அண்மையில் அணியாய்.
வந்து அமையும்;அழகு
தமிழில்.
மரபுக் கவிதைகளும்
புதுக் கவிதைகளும்
கரம் கோர்த்துப் பயணம் செய்வதே
தமிழின் தனித்துவச் சிறப்பு என்றே
தன்னெஞ்சு நிமிர்த்திச் சொல்வேன்.
சசிகலா விஸ்வநாதன்