கம்பங்கூழ் குடிக்கலாமா?

by admin 1
32 views

கம்பு

✨ மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

✨ அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

✨ வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

✨ கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

✨ உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

✨ கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

✨ இதயத்தை வலுவாக்கும்.

✨ சிறுநீரைப் பெருக்கும்.

✨ நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

✨ இரத்தத்தை சுத்தமாக்கும்.

✨ உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

✨ நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

✨ தாதுவை விருத்தி செய்யும்.

✨ இளநரை போக்கும்.

🚫 முக்கியக்குறிப்பு:

💠 அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும்.

அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

💥பின் குறிப்பு:

🔸தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே.

🔸சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.

You may also like

Leave a Comment

error: Content is protected !!