அறுசுவை அட்டில் : குளு குளு குல்பி ஐஸ் செய்யலாமா?

by Admin 4
28 views

குளு குளு குல்பி ஐஸ்

✴️தேவையான பொருட்கள்:

🍦ஃபுல் கிரீம் பால் 1/4 லிட்டர்

🍦சர்க்கரை 2 மேஜைக்கரண்டி

🍦நட்ஸ் பவுடர் 10 கிராம்

🍦குங்கும பூ 1 சிட்டிகை

✴️செய்முறை:

🍧முதலில் ஒரு கடாயில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சி அது பாதி அளவு வரும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

🍧நன்றாக கொதிப்பதற்கு குறைந்தது 5 முதல் 8 நிமிடம் ஆகும்.

🍧ஆகையால் நன்றாக கொதித்து பாதியளவு வந்ததும் அதில் இரண்டு மேஜைக்கரண்டி சர்க்கரையை சேர்க்கவும்.

🍧பின்பு அதில் குங்குமப்பூ சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

🍧பின்பு அதன் நிறம் சந்தன நிறமாக மாறும்.

🍧இன்னும் சிறிதளவு பால் கெட்டியாக மாற வேண்டும்.

🍧பிறகு பால் கெட்டியானவுடன் அதில் நம்மிடம் இருக்கும் நட்ஸ் பவுடரை சேர்க்கவும்.

👉🏻பின் குறிப்பு:

(நாம் பால் சேர்க்கும் அளவிற்கு ஏற்றவாறு அனைத்து அளவையும் அதற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும்)

🍨நட்ஸ் பவுடரை சேர்த்ததும் பால் இன்னும் கெட்டியாக ஆரம்பிக்கும்.

🍨இந்நிலையில் அடுப்பை அனைத்து விட்டு நன்றாக ஆறவிடவும்.

🍨பின்பு குல்பி மோல்டில் அல்லது சிறிய டம்ளரில் அக்கலவையை சேர்த்து ஒரு ஐஸ்க்ரீம் குச்சியை அதனுடன் குத்தி பிளாஸ்டிக் கவர் அல்லது அலுமினிய ஃபாயில் சேர்த்து நன்றாக கட்டி வைக்கவும்.

🍨ஃப்ரீஸரில் 5 மணி நேரம் வைத்து வெளியே எடுத்தால் சுவையான மலாய் குல்பி தயார்.

🍨கட்டி வைத்த ஐஸ்க்ரீம் கலவையை ஃப்ரீஸரில் 5 மணி நேரம் வைத்து வெளியே எடுத்து சிறிதளவு டம்ளரை தண்ணீரில் முக்கி குச்சியை பிடித்து வெளியே இழுத்தால் சுவையான மலாய் குல்பி தயார்…..

#பகிர்வு

You may also like

Leave a Comment

error: Content is protected !!