அறுசுவை அட்டில் : கச்சான் சட்னி

by Admin 4
11 views

நிலக்கடலை சட்னி
            
💠தேவையான பொருட்கள்:
            
 🔹நிலக்கடலை – ஒரு கையளவு (வறுத்து தோல் நீக்கியது)
🔹சிவப்பு மிளகாய் வத்தல் – 5
🔹புளி – 1/2 கோலி அளவு
🔹தேங்காய் துருவல் – 5 டீஸ்பூன்
🔹உப்பு – 2 சிட்டிகை

💠தாளிக்க தேவையான பொருட்கள் :

🔸கடுகு – 1 டீஸ்பூன்
🔸உளுத்தம் பருப்பு – சிறிதளவு
🔸சிறிய வெங்காயம் – 1 கப் (பொடிதாக நறுக்கியது)
            
💠செய்முறை:

🔶முதலில் கடாயில் புளி, வத்தல், தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.

🔶மிளகாயின் வாசம் வந்தவுடன் நிறுத்தி சூடு ஆறிய பின் நிலக்கடலை பருப்பை சேர்த்து கலவையை அரைக்கவும்.
            
🔶பின் கடாயில் 4 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

🔶பின் அரைத்த கலவையை ஊற்றி உப்பு போடவும்.

🔶நன்கு கலக்கி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

🔶இப்போது சுவையான நிலக்கடலை சட்னி தயார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!