✨ஸ்பைசி காய்கறி குருமா
♦️தேவையான பொருட்கள்:
🔻காய்கறி கலவை ( கேரட், பீன்ஸ், பட்டாணி, கிழங்கு) – 2 கப்
🔻வெங்காயம் – 1/2 கப்
🔻தக்காளி – 3
🔻தயிர் – 1 மேசைக்கரண்டி
🔻மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
🔻கறிவேப்பிலை – சிறிதளவு
🔻கொத்தமல்லி இலை – சிறிதளவு
🔻புதினா – 4 இலைகள்
🔻எண்ணெய் – தேவையான அளவு
🔻உப்பு – தேவையான அளவு
♦️அரைக்க:
🔹தேங்காய் துருவல் – 1/4 கப்
🔹இஞ்சி – சிறிய துண்டு
🔹பூண்டு – 4 பல்
🔹மிளகாய் வற்றல் – 6
🔹பட்டை – சிறியதுண்டு
🔹சோம்பு – 1/4 தேக்கரண்டி
🔹சீரகம் – 1/4 தேக்கரண்டி
🔹மிளகு – சிறிதளவு
🔹தனியா – 2 தேக்கரண்டி
🔹கசகசா – சிறிதளவு
🔹கிராம்பு – 3
♦️செய்முறை:
✴️முதலில் வாணலியில் மிளகாய் வற்றல், பட்டை, சோம்பு, சீரகம், மிளகு, தனியா, கசகசா, கிராம்பு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
✴️பின் தேங்காய், இஞ்சி, பூண்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
✴️குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
✴️வெங்காயம் வதங்கியவுடன் கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.
✴️பின் தயிர், அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
✴️பின் நறுக்கிய காய்கறிகள், தண்ணீர், மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு போட்டு மூடிப்போட்டு வேகவிடவும்.
✴️கடைசியில் கொத்தமல்லி இலை, புதினா தூவி இறக்கி பரிமாறவும்.