அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு உறைந்த நிலையில் இருந்த ஒரு கருவில் இருந்து குழந்தை பிறந்துள்ளது.
இது மருத்துவ உலகில் ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது. தாடியஸ் டேனியல் பியர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழந்தை, உலகின் ‘மிக வயதான குழந்தை’ என்று அழைக்கப்படுகிறது.
1994-ஆம் ஆண்டு ஐவிஎஃப் (IVF) முறையில் உருவாக்கப்பட்ட இந்தக் கரு, லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸ் என்ற தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக குழந்தை இல்லாதிருந்த இந்தத் தம்பதிக்கு, இந்தக் குழந்தை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்தக் குழந்தையின் பிறப்பானது, பல வருடங்கள் உறைந்த நிலையில் இருந்த கருக்களும் ஆரோக்கியமான குழந்தைகளாகப் பிறக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.
