எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
நான் உல்லாசமாக போக விரும்பும் இடம்… மலைகளின் இளவரசி ஊட்டி தான்.
அம்மாடியோவ்…!
தாவரவியல் பூங்கா எல்லோரையும் ஈர்க்கும்.
பூக்கள் கவரும்.
படகு இல்லம். ஆம். படகு சவாரி செய்ய விரும்பும் இடம்.
மனதை கொள்ளை கொள்ளும். அங்கு குளிருக்கு
ஏற்ற மிளகாய் பஜ்ஜி கிடைக்கும்.
பிறகு….
தொட்டபெட்டா. ஸ்டார் அவுஸ்.
மிக உயர்ந்த சிகரம். அங்கு இருந்து ஊட்டியை பார்க்க
மனம் முழுக்க பட்டாம்பூச்சிகள்
பறக்கும்.
தொட்டபெட்டாவில் ஒரு டெலஸ்கோப் உள்ளது. அதன் மூலம் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களை பார்ப்பது.
ஊட்டியில் பார்க்க சிறுவர் பூங்கா, ரோஸா பூங்கா குட்டீஸ் முதல் சீனியர் சிடிசன் வரை எல்லோரையும் ஈர்த்து விடும்.
ஆம். எல்லாம் சரி. சீதோஷ்ண நிலை எப்படி…?
அட கடவுளே…!
இயற்கை தந்த ஏ/சி தான் ஊட்டி.
ஆம்.
நான் குளு குளு ஊட்டி போகிறேன்.
நீங்களும் வருகிறீர்களா…?
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.