எழுதியவர்: நா.பத்மாவதி
1980களில் மே மாதம் விடுமுறை எனில் நாங்கள் போகும் ஒரே இடம் பெரியப்பா வீடு ஸ்ரீரங்கம்.
அதிகாலை மலைக்கோட்டை விரைவுவண்டி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நுழைய மனதில் விவரிக்க முடியாத சந்தோஷம்.
ரயில் நிலைய வாசலில் சவாரிக்கு காத்திருக்கும் மாட்டுவண்டி, குதிரைவண்டிக்காரர்கள்.
அமைதியான பொழுதிலும் மாட்டின் மணியோசையோடு தெருவில் நுழையும் பொழுது நம்மை வரவேற்கும் அழகான கோலங்கள்.
விடிந்தபின் மெட்ராஸ்ல இருந்து “பொண்ணு வந்துருக்குன்னாங்க பாத்துட்டு போலாம்னு வந்தோம்” என அக்கம்பக்கத்தினர் வந்து போவார்கள். சாயங்காலம் கோவில் ரங்கவிலாஸ் கடைகளை அங்குள்ள தோழிகளோடு வேடிக்கை பார்க்க போவது எனக்கு மிகவும் பிடிக்கும். பிறகு ஒருநாள் கல்லணை, முக்கொம்பு சினிமா என அண்ணன் அண்ணியோடு அங்கு இருந்த நாட்கள் ரொம்ப மகிழ்வான தருணங்கள்.
இவை சிறுவயதில் விடுமுறை நாட்களில் நான் ரசித்து சந்தோஷப்பட்ட அனுபவங்களை, மலரும் நினைவுகளாக அசைபோடவே திரும்பவும் செல்ல விழைகிறேன்.
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.